/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இ.பி.எஸ்., உளறுவதை கண்டுகொள்வதில்லை சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டி
/
இ.பி.எஸ்., உளறுவதை கண்டுகொள்வதில்லை சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டி
இ.பி.எஸ்., உளறுவதை கண்டுகொள்வதில்லை சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டி
இ.பி.எஸ்., உளறுவதை கண்டுகொள்வதில்லை சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டி
ADDED : அக் 27, 2024 04:17 AM
சேலம்: ''முதல்வர், துணை முதல்வர், மக்களை சந்தித்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து வருவதால் இப்போதே, இ.பி.எஸ்.,க்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது.
அதனால் ஏதேதோ உளறுகிறார். அதையெல்லாம் கண்டுகொள்வ-தில்லை,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரி-வித்தார்.சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மக்க-ளிடம் மனுக்களை பெற்று, அதற்கு விரைவில் தீர்வு காண அதிகா-ரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளி மாலதி மனு மீது உடனே நடவடிக்கை எடுத்து, அவரை மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் தற்காலிக ஊழிய-ராக பணியாற்றுவதற்கான ஆணையை வழங்கினார். மற்றொரு மாற்றுத்திறனாளி அமுதாவுக்கு, 7,900 ரூபாய் மதிப்பில், மடக்கு சக்கர நாற்காலியை வழங்கினார்.
முதல்வர் கோப்பை போட்டியில் மாற்றுத்
தினாளிகள் பிரிவில் மாநில கால்பந்து போட்டியில் தங்கம் வென்-றவர்களை பாராட்டினார். தொடர்ந்து, 90 பயனாளிகளுக்கு, 50.48 லட்சம் ரூபாய் மதிப்பில் நல உதவிகளை வழங்கினார்.
இதில், சேலம் எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., அருள், கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்-பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டி:
கடந்த, 10 ஆண்டுகளில் இடைப்பாடி தொகுதிக்கு அமைச்சரா-கவும், முதல்வராகவும் இருந்த இ.பி.எஸ்., தொகுதி மக்களுக்கு எதையுமே செய்யவில்லை. அதனால்தான் அங்குள்ள மக்கள் மனு அளிக்க குவிந்தனர். அவரது தொகுதியில் மட்டும், 3,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இ.பி.எஸ்., பேசுவது குறித்து கவலை கிடையாது.
சேலத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி, டவுன் பஞ்சாயத்துகளில் மக்களை சந்தித்து குறைகள் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர், துணை முதல்வர், மக்களை சந்தித்து அவர்-களது குறைகளை நிவர்த்தி செய்து வருவதால் இப்போதே, இ.பி.எஸ்.,க்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால் ஏதேதோ உளறுகிறார். அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. மக்கள் பணியை செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.