/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிளியூர் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
/
கிளியூர் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
கிளியூர் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
கிளியூர் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : ஆக 19, 2024 06:06 AM
ஏற்காடு: ஏற்காட்டில் இரு வாரங்களாக இரவில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குளுகுளுவென ஏற்-காடு மாறியுள்ளது. மேலும் பலத்த மழையால் கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு நேற்று ஏராளமான சுற்-றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர். பலர் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். அதேபோல் ஏராளமானோர் ஏற்காட்டை சுற்றிப்பார்த்து, படகு இல்லத்தில் சவாரி செய்தும், பூங்காக்களில் விளையாடியும் குதுாகலம் அடைந்தனர்.
கொப்பம் ஏரி நிரம்பியது
ஏற்காடு மலையில் இருந்து வழியும் மழைநீர், மாநகரின் சாக்கடை கழிவுநீருடன் கலந்து திரும-ணிமுத்தாற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு வீரபாண்டி, கொப்பம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த மாதம் வரை ஏரியில் பாதி அளவுக்கு மட்டும் தண்ணீர் இருந்-தது. தற்போது ஏரி நிரம்பியுள்ளது. அதில் இருந்து, 6 மாதங்களுக்கு பின் கோடி விழுந்து உபரிநீர் கால்வாயில் வழிந்தோடுகிறது. இதனால் ஏரி நீரை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.போக்குவரத்து பாதிப்புஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல் அதன் சுற்-றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, 6:00 மணி முதல், சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. கெங்கவல்லியில், 6:30 மணிக்கு பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது ஆத்துார் - கெங்க-வல்லி சாலையில் அடுத்தடுத்து மரக்கிளை, மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழையால் ஆத்துார் - கெங்கவல்லி சாலையில், 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, சாலையில் விழுந்த, 6 மரங்கள், கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள், நடுவலுார் வழியாக திருப்பிவிடப்பட்டன.

