/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு முட்டல் ஏரி நிரம்பியதால் சுற்றுலா மையம் மூடல்

ADDED : டிச 03, 2024 07:03 AM
ஆத்துார்: ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் வருவதால், சூழல் சுற்றுலா
மையத்தை, வனத்துறையினர் மூடினர்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம்
கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்
வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா மைய திட்டத்தின் கீழ் செயல்பட்டு
வருகிறது. மூன்று தினங்களாக கல்வராயன்மலை பகுதியில் பெய்து வரும்
மழையால், நேற்று இரண்டாவது நாளில், ஆணைவாரி நீர் வீழ்ச்-சியில் மேலும் தண்ணீர்
வரத்து அதிகரித்தது. நீர்வீழ்ச்சி வழிப்பா-தைகளில் உள்ள நீரோடைகளிலும்
சிறுபாலம், சாலையை மூழ்க-டித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் நீர் வீழ்ச்சிக்கு
சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், 60 ஏக்கர் பரப்பளவிலான முட்டல் ஏரி முழுவதும் நிறைந்து, உபரி நீர்
வெளியேறி வருகிறது. ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு
வரும் வரை, சூழல் சுற்றுலா மையம் மூடப்படுவதாக, வனத்துறையினர்
தெரிவித்தனர்.