/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆங்கில புத்தாண்டால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்
/
ஆங்கில புத்தாண்டால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்
ADDED : ஜன 02, 2025 07:26 AM
ஏற்காடு: ஆங்கில புத்தாண்டையொட்டி, ஏற்காட்டுக்கு நேற்று முன்தினம் காலை முதலே, சுற்றுலாப்பயணியர் வந்தபடி இருந்தனர். அவர்கள், விடுதிகளில் தங்கி புத்தாண்டை கொண்டாடினர். இதனால் நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்-சிகள் நடந்தன. இதில் சுற்றுலா பயணியர் ஒன்றுகூடி நடனமாடி, 'கேக்' வெட்டி கொண்டாடினர். நேற்றும் ஏற்காட்டுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் குவிந்தனர். படகு இல்லம், அண்ணா, ஏரி பூங்காக்கள், ரோஜா தோட்டம், சூழல் சுற்றுலா பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணியர் பார்வையிட்-டனர்.
அபராதம்இருப்பினும் கார், பைக்குகளை, அண்ணா பூங்கா, படகு இல்ல சாலைகள் ஓரம், சுற்றுலா பயணியர் நிறுத்தி இருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட, இடையூறாக நிறுத்தப்பட்ட, 40 கார்களின் உரிமையாளர்களுக்கு, ஏற்காடு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் ஹெல்மெட், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய, 20க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்-தனர்.
உயிரியல் பூங்காசேலம், குரும்பப்பட்டியில் உயிரியல் பூங்காவை ஏராளமானோர் சுற்றிப்பார்த்தனர்.இதுகுறித்து பூங்கா வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'புத்-தாண்டால், 2,460 பேர் சுற்றிப்பார்த்தனர். நுழைவு உள்ளிட்ட கட்-டணம் மூலம், 1.19 லட்சம் ரூபாய் வசூலானது' என்றனர்.அதேபோல் மேட்டூர் அணை பூங்காவை, 6,123 சுற்றுலா பய-ணியர் பார்வையிட்டனர். அவர்கள் கொண்டு வந்த மொபைல், கேமரா, பவளவிழா கோபுரத்துக்கு சென்று அணையை பார்வை-யிட்டது ஆகியவற்றால், நீர்வளத்துறைக்கு, 1,01,060 ரூபாய் வசூலானது.
மினி பஸ் இயக்கம்ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வ-ராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்குள்ள ஆணைவாரி நீர் வீழ்ச்சி, முட்டல் ஏரி, பூங்கா, படகு சவாரி ஆகியவை, வனத்-துறை சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. ஆனால் முட்டல் ஏரியில் இருந்து, ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு செல்ல, 5 கி.மீ., என்பதால், சுற்றுலா பயணியர் சிரமப்பட்டனர். இதனால் நேற்று முதல், வனத்துறை சார்பில் மினி பஸ் சேவை தொடங்கப்-பட்டுள்ளது. அந்த வாகனத்தில் சென்று வர, ஒருவருக்கு தலா, 20 ரூபாய் கட்டணம் வசூல் செய்வதாக, வனத்துறையினர் தெரி-வித்துள்ளனர்.