/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முட்டல் ஏரியில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
/
முட்டல் ஏரியில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
முட்டல் ஏரியில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
முட்டல் ஏரியில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ADDED : நவ 05, 2024 01:36 AM
முட்டல் ஏரியில் படகு சவாரி
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஆத்துார், நவ. 5-
முட்டல் ஏரியில் படகு சவாரி செய்து, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆத்துார் அருகே, கல்வராயன்மலை அடிவார பகுதியில் முட்டல் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி ஆகியவை வனத்துறையின், சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கல்வராயன் மலை பகுதியில் பெய்த மழையால், நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது ஆர்ப்பரித்து கொட்டி வந்ததால், கடந்த 8- முதல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த, 28 முதல், குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று நீர் வீழ்ச்சியில் ஏராளமானோர் குளித்தனர். தொடர்ந்து முட்டல் ஏரியில் படகு சவாரி செய்து, பூங்காவையும் ரசித்து சென்றனர்.