/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடர் விடுமுறை எதிரொலி ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணியர்

ADDED : நவ 03, 2024 02:38 AM
ஆத்துார்: தொடர் விடுமுறையால் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் அதிகளவில் சுற்றுலா பயணியர் குளித்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்-குள்ள முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி, வனத்துறையின் சுற்-றுலா திட்டத்தில் செயல்படுகிறது. தற்போது தீபாவளியை-யொட்டி பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்-றுலா பயணிகள், ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு வந்து செல்கின்றனர்.
தொடர் மழையால் கல்வராயன் மலை பகுதியில் இருந்து வரும் நீர் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் நேற்று ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர். வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
புது ஏரி நிரம்பியது
அதேபோல் ஆத்துார், கல்வராயன்மலை பகுதியில் பெய்த மழையால் வசிஷ்ட நதி, நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிக-ரித்தது. இதனால் தென்னங்குடிபாளையத்தில், 60 ஏக்கரில் உள்ள புது ஏரிக்கு தண்ணீர் அதிகளவில் வந்தது. நேற்று ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இந்த நீர், அய்யனார்கோவில் ஏரிக்கு செல்கிறது. புது ஏரி நிரம்பியதால் பாசன விவசாயிகள், மக்கள், உபரிநீர் வெளியேறும் இடத்தில் பூக்கள் துாவி வழிபட்டனர். மேலும் இளைஞர்கள் குளித்தும், மீன் பிடித்தும் மகிழ்ந்தனர்.