/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழை ஓய்ந்ததால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
/
மழை ஓய்ந்ததால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
மழை ஓய்ந்ததால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
மழை ஓய்ந்ததால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
ADDED : டிச 15, 2024 12:58 AM
ஏற்காடு, டிச. 15-
ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சில நாட்களாக ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை, கடும் பனிமூட்டம் இருந்ததால் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்த வெறிச்சோடியது.
கடந்த, 4 நாட்களாக இருந்த பனி மூட்டம் விலகி நேற்று இயல்பு நிலை திரும்பி, வெயில் தென்பட்டது.
இதனால் நேற்று மதியம் முதல், சுற்றுலா பயணியர் கணிசமான அளவில் வரத்தொடங்கினர். அண்ணா, ஏரி பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் ஆகிய இடங்களை, சுற்றுலா பயணியர் பார்த்து ரசித்தனர். படகு இல்லத்தில் ஏராளமானோர் சவாரி செய்து மகிழ்ந்தனர்.