/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு, மேட்டூர், ஆனைவாரியில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
/
ஏற்காடு, மேட்டூர், ஆனைவாரியில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஏற்காடு, மேட்டூர், ஆனைவாரியில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஏற்காடு, மேட்டூர், ஆனைவாரியில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : நவ 10, 2025 02:02 AM
ஏற்காடு,;ஏற்காட்டுக்கு இரு வாரங்களாக சுற்றுலா பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. ஆனால் நேற்று முன்தினம் மதியம் முதல், ஏற்காட்டுக்கு அதிகளவில் சுற்றுலா பயணியர் வரத்தொடங்கினர். ஞாயிறான நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அவர்கள், அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களை குடும்பத்துடன் கண்டுகளித்தனர். பலர், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
5,127 பேர்
மேட்டூர் அணை பூங்காவை, நேற்று, 5,127 சுற்றுலா பயணியர் பார்வையிட்டனர். அவர்கள், அவர்களது மொபைல் போன் மற்றும் பவளவிழா கோபுரம் சென்று அணையை பார்வையிட்டதன் மூலம், நுழைவு கட்டணமாக, 81,600 ரூபாய் நீர்வளத்துறைக்கு வசூலானது.
கடந்த வார ஞாயிறில், அணை பூங்காவை, 4,484 பேர் பார்வையிட்டனர். இந்த வாரம், அதை விட கூடுதல் சுற்றுலா பயணியர் பார்வையிட்டனர். அதேபோல் ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணியர் குளித்து உற்சாகம் அடைந்தனர். முட்டல் ஏரி பகுதியில் உள்ள பூங்காவையும் பார்வையிட்டனர். மேலும் தாரமங்கலம், ஓமலுார் சாலையில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்காவில், பெற்றோர், குழந்தைகளுடன் விளையாடினர்.

