/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணியர்
/
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணியர்
ADDED : அக் 05, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில்
குவிந்த சுற்றுலா பயணியர்
ஆத்துார், அக். 5-
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்குள்ள முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி, வனத்துறை சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. தற்போது காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். நேற்றும் பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர், உறவினர்களுடன் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து நீர்வீழ்ச்சி
யில் குளித்து மகிழ்ந்தனர்.