/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் விசாரிக்க 2 பேர் குழு பல்கலை நடவடிக்கைக்கு தொழிற்சங்கம் கண்டனம்

ADDED : ஜன 09, 2025 07:42 AM
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, முன்னாள் பொறுப்பு பதிவாளர் தங்கவேல் மீது பல்வேறு புகார்கள் எழுந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விசாரணையில் குற்றச்-சாட்டுகள் நிரூபணமானது. 2024 பிப்., 7ல், தங்கவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துணைவேந்தர் ஜெகநாத-னுக்கு, உயர்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் கார்த்திக் கடிதம் அனுப்பினார்.
தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்காத துணைவேந்தரை கண்-டித்து, பல்கலை வளாகத்தில் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்கலை சாசன விதிகளை மீறியதாக, போராட்டத்தில் ஈடுபட்ட, 70க்கும் மேற்பட்டோரிடம், விளக்கம் கேட்டு பல்கலை சார்பில், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அவர்-களும், விளக்க கடிதம் வழங்கினர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரிக்க, விசாரணை குழு உறுப்பினர்களாக, சென்னை அண்ணா பல்-கலை, மருத்துவ மின்னணுவியல் மைய பேராசிரியர் முத்தன், பெரியார் பல்கலை வேதியியல் துறை தலைவர், ஆட்சிக்குழு உறுப்பினரான ராஜ் ஆகியோரை நியமித்து, பெரியார் பல்கலை நிர்வாகம், கடந்த, 3ல் உத்தரவிட்டது. அக்குழுவினர் வரும், 23ல், முதல்கட்டமாக, 25 பேரிடம் விசாரிக்க உள்ளனர்.தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்காத துணைவேந்தர், அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை ஊழியர்கள் மீது விசாரிக்க, குழு நியமித்துள்ளதற்கு, பல்கலை தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.