ADDED : மே 29, 2026 02:58 AM

அ நிறம் | அளவு
சேலம்;சேலம், கொண்டலாம்பட்டி அருகே புத்துார் அக்ர-ஹாரம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் வைகாசி, 2வது வியாழனை ஒட்டி, பொங்கல் விழா நேற்று நடந்தது. அதை ஒட்டி பாரம்பரிய எருதாட்டம், மதியம், 2:00 மணிக்கு தொடங்கியது.
ஒரு கோர்வைக்கு, 7 காளைகள் வீதம், 10 கோர்வைக்கு, 70 காளைகளை, மாரி-யம்மன் கோவில் திடலுக்கு அழைத்து வந்தனர்.தொடர்ந்து காளைக்கு, 25 பேர் வீதம், ஒவ்வொரு காளையாக அழைத்து வரப்பட்டு ஆட விட்டனர். அப்போது இளைஞர்கள், சக்கர வண்டி பொம்மை-களை வைத்து, காளைகள் மீது மோதுவது போல் செல்ல, அப்போது காளைகள், அந்த பொம்-மையை கொம்புகளால் தட்டி துாக்கின. அதை பார்த்து, பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்-பினர். சில இளைஞர்கள், காளைகளின் திமிலை பிடித்தபடி சென்றனர்.
