sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

10 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட சிறுமி பலியானதால் சோகம்

/

10 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட சிறுமி பலியானதால் சோகம்

10 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட சிறுமி பலியானதால் சோகம்

10 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட சிறுமி பலியானதால் சோகம்


ADDED : ஜன 02, 2025 07:27 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த, 3 வயது சிறுமி, 10 நாட்களுக்கு பின் நேற்று மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.ராஜஸ்தான் மாநிலம், கிரட்புரா கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில், 700 அடி ஆழ ஆழ்துளை கிணறு உள்ளது. டிச., 23ம் தேதி, இதன் அருகே விளையாடிக்கொண்டிருந்த, 3 வயது சிறுமி செட்னா, திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.

இதை-யடுத்து, பேரிடர் மீட்புப்படையினர், மருத்துவ குழுவினருடன் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.அவர்கள் சிறுமி சுவாசிப்பதற்கு வசதியாக, குழாய் மூலம் ஆழ்-துளை கிணற்றில் ஆக்சிஜன் செலுத்தினர். தொடர்ந்து ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு குழி தோண்டி சிறுமியை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த குழி சரியான திசையில் செல்லா-ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.இந்நிலையில், 700 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுமியை மீட்க, டில்லி மற்றும் ஜெய்ப்பூரை சேர்ந்த நிபுணர்கள் வரவழைக்கப்பட்-டனர். அவர்கள் ஆலோசனைப்படி, ஆழ்துளை கிணற்றுக்கு அருகே தோண்டப்பட்ட குழியின் அகலத்தை, 8 அடியில் இருந்து, 12 அடியாக அதிகரித்து தோண்டினர். இதையடுத்து, ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமி செட்னா, 10 நாட்களுக்கு பின் நேற்று மீட்கப்பட்டார். பின், அவர் அருகே உள்ள மருத்துவ-மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்-தனர். இதனால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.






      Dinamalar
      Follow us