அயோத்தியாப்பட்டணத்தில் விரைவில் 'ரயில் கோச்' உணவகம்
அயோத்தியாப்பட்டணத்தில் விரைவில் 'ரயில் கோச்' உணவகம்
ADDED : ஜன 29, 2026 04:40 AM
சேலம்: பழைய ரயில் பெட்டியை புதுப்பித்து, சேலத்தில் பிரமாண்டமாக 'ரயில் கோச்' உணவகம் உருவாகி வருகிறது.
இந்திய ரயில்வே சார்பில், அதன் வருவாயை அதிகரிக்க பல்-வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பழைய ரயில் பெட்டிகளை புதுப்பித்து, காலியாக உள்ள ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சாலை போக்குவரத்து அதிக-முள்ள பகுதிகளில், 'ரயில் கோச்' உணவகங்கள் அமைத்துக் கொள்ள, தனியாருக்கு குத்தகைக்கு விடப்படுகிறது.சென்னையை தலைமையிடமாக கொண்ட, தெற்கு ரயில்வே சார்பில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய நகரங்களில் இந்த வகை ரயில் கோச் உணவகங்கள் ஏற்படுத்தி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட கோவை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், ஆறு மாதங்களுக்கு முன் ரயில் கோச் உணவகம் ஆரம்பிக்கப்பட்டது.
சேலம் கோட்டத்தில் இரண்டாவது ரயில் கோச் உணவகம், சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஸ்டேஷன் அருகே, ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கான்கிரீட் மேடை அமைத்து, அதில் பழைய ரயில் பெட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் பிரமாண்டமான, 'ரயில்வே கோச்' உணவகம் அமைக்க தனியாருக்கு குத்தகை விடப்பட்டுள்-ளது. இதற்காக அயோத்தியாபட்டணம் ஸ்டேஷன் அருகே சேலம்-ஆத்துார், சேலம்-அரூர் பிரதான சாலை சந்திப்பில், ரயில்-வேக்கு சொந்தமான, 10 ஆயிரம் சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்-டுள்ளது. இங்கு ரயில் பெட்டியில் அமர்ந்தும், வெளியே அமர்ந்தும் உணவருந்தும் வகையில் இருக்கைகள் அமைத்து, வாகனங்கள் நிறுத்தும் இடவசதியுடன், உணவகம், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு கூறினர்.
