/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில் கண்ணாடி உடைப்பு: 2 'குடி'மகன்கள் கைது
/
ரயில் கண்ணாடி உடைப்பு: 2 'குடி'மகன்கள் கைது
ADDED : அக் 12, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் ரயில்வே சந்திப்பில், இரு பெட்டிகள் கொண்ட ஆய்வு பணிக்கான ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பக்கவாட்டு மற்றும் கதவு கண்ணாடிகளை, கடந்த, 2ல், மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
இதுதொடர்பாக, கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் சவுரவ்குமார் மேற்பார்வையில் விசாரணை குழுவினர், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வுக்கு உட்படுத்தியதில், இருவர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களது புகைப்படங்களை வைத்து விசாரித்ததில், இரும்பாலையை சேர்ந்த மணி, 23, பழைய சூரமங்கலம் ேஷக்உம்மர், 54, என தெரிந்தது. நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்தபோது, 'போதை'யில் கண்ணாடிகளை உடைத்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.