/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சமூக அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரியார் பல்கலையில் பயிற்சி முகாம்

ADDED : செப் 23, 2025 01:55 AM
ஓமலுார், சேலம், பெரியார் பல்கலை உளவியல் துறை சார்பில், சமூக அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்காக 'பண்பியல் ஆய்வு முறைகள்' குறித்த ஆறு நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
துணைவேந்தர் நிர்வாக குழு உறுப்பினர் சுப்ரமணி விழாவை துவக்கி வைத்து, செயற்கை நுண்ணறிவு ஆய்விலும், சமூக மாற்றத்திலும் வகிக்கும் முக்கிய பங்கை சுட்டிக்காட்டினார். சாட் ஜிடிபி, ஜெமினி போன்ற ஏஐ அமைப்புகள் உள்ளூரில் செய்யும் பங்களிப்புகள் குறித்து பேசினார். தொடர்ந்து ஆராய்ச்சியாளர்களின் சமூக பொறுப்பை வலியுறுத்தியதோடு, அவர்கள் எப்போதும் புதிய அறிவுடன் புதுப்பிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
ஆறு நாள் நடைபெறும் முகாமில் வழக்காடு ஆய்வு, வாழ்வியல் ஆய்வு, இனவியல் ஆய்வு போன்ற பல்வேறு அணுகுமுறைகள் விளக்கப்படவுள்ளது.
இதன் மூலம் பங்கேற்பாளர்கள் தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் விளக்கம் ஆகியவற்றில் கைதேர்ந்தவர்களாக மாறி, உள்ளூர் பிரச்னைகளை தீர்க்கும் திறன் வாய்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளலாம். உளவியல் துறை தலைவர் பேராசிரியர் வெங்கடாசலம், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி
மாணவர்கள் பங்கேற்றனர்.