ADDED : ஜூன் 05, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி; பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், வேளாண் துறையின், 'அட்மா' திட்டத்தில், உளுந்து பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை விழிப்பு-ணர்வு முகாம் நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத் தலைமை வகித்தார்.
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன், பயறு வகை பயிர் சாகுபடியில் பருவம், ரகம், விதை அளவு, விதை நேர்த்தி, மண், நீர் மாதிரி பரிசோதனையின் முக்-கியத்துவம் பற்றி விளக்கினார். அம்மாபாளையம், சந்தியூர் விவசாயிகள் பயன் அடைந்தனர்.
