ADDED : ஆக 28, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்:தலைவாசல்,
நத்தக்கரையில், 'அட்மா' திட்டத்தில் மக்காச்சோள சாகுபடி மற்றும்
தொழில்நுட்ப முறை குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நேற்று
நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமை வகித்தார்.
அதில்
மக்காச்சோள பயிரில் படைப்புழு கட்டுப்படுத்தல், ஒருங்கிணைந்த
பூச்சி மேலாண்மை, இன கவர்ச்சி பொறி பயன்பாடு, வேளாண் திட்டங்கள், நீரில்
கரையும் உரம் பயன்பாடு, களையெடுத்தல், சாகுபடி அதிகரித்தல், மானிய
திட்டங்கள் குறித்து, வேளாண் அலுவலர்கள் எடுத்துரைத்தனர். துணை
வேளாண் அலுவலர் மணவழகன், உதவி வேளாண் அலுவலர் கார்த்திக், உதவி
தொழில்நுட்ப மேலாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
