தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மண் வள மேலாண்மை குறித்து பயிற்சி

மண் வள மேலாண்மை குறித்து பயிற்சி

மண் வள மேலாண்மை குறித்து பயிற்சி


ADDED : ஆக 31, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அயோத்தியாப்பட்டணம்:அயோத்தியாப்பட்டணம், விளாம்பட்டியில், 'அட்மா' திட்டத்தில் உள் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி, 'மண் வள மேலாண்மை' தலைப்பில் நேற்று முன்தினம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சண்முகப்பிரியா தலைமை வகித்து, விவசாயிகள் அடையாள எண் பதிவு செய்வது குறித்து தெரிவித்தார்.

மண் மாதிரி எடுப்பதன் முக்கியத்துவம், மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் சமச்சீர் உரங்களை பயன்படுத்தல், மண்வள அட்டையின் பரிந்துரைகளை பின்பற்றுதல், இயற்கை, பசுந்தாள், உயிர் உரங்களை பயன்படுத்தும்படி, பயிற்சி அளித்து மண் மாதிரி எடுப்பது குறித்து, மண் பரிசோதனை வேளாண் அலுவலர் தனலட்சுமி, செயல் விளக்கம் அளித்தார். விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

தன்னிறைவு அடைதல்

பெத்தநாயக்கன்பாளையம், தமையனுாரில் நேற்று முன்தினம் பயிற்சி நடந்தது. மண் மாதிரி பரிசோதனை, மண் நல மேலாண்மை, சமச்சீர் உரப்பயன்பாடு மற்றும் உரப்பயன்பாட்டு முறைகள், நுண்ணுயிர் பாசன திட்டம் பற்றி, வேளாண் அலுவலர் மவுலிதரன், விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். பயிறு வகைகளில் தன்னிறைவு அடைதல் பற்றி, பயிற்சியாளர் பிரவீன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us