/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி
/
முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 18, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பொது மருத்துவத்துறை சார்பில், முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் பொது மருத்துவ துறைத்தலைவர் சுரேஷ் கண்ணா தலைமை வகித்து பேசினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு நரம்பியல், இருதயம், நுரையீரல், உள்ளிட்ட துறை செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். பயிற்சியில் அரசு, தனியார் மருத்துக்கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி மருத்துவர்கள் விஜயராஜி, மஞ்சுளா உள்பட பலர் கலந்துகொண்டனர்.