/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள பயிற்சி
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாள பயிற்சி
ADDED : மார் 20, 2024 07:23 AM
கெங்கவல்லி : கெங்கவல்லியில், அதன் சட்டசபை தொகுதிக்கான, மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் தலைமை வகித்தார். அதில், 27 பேருக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கையாளும் முறை, ஓட்டுப்பதிவு பின்பற்றும் வழிமுறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் ஏற்காடு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் அதன் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, வாழப்பாடியில் பயிற்சி நடந்தது.
அதில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கு, அஞ்சலக ஓட்டுப்பதிவு குறித்த பயிற்சி, ஓட்டுச்சாவடி பூத் நம்பர் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயந்தி, 350க்கும் மேற்பட்ட மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பங்கேற்றனர்.

