/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்மாற்றி வெடித்து தீ: 2 கடை நாசம்
/
மின்மாற்றி வெடித்து தீ: 2 கடை நாசம்
ADDED : ஆக 22, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, இடைப்பாடி, வெள்ளாண்டிவலசில் சினிமா தியேட்டர் அருகே மின்மாற்றி உள்ளது. அதில் உள்ள ஆயில் கசிந்து, நேற்று இரவு, 7:00 மணிக்கு வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் அருகே இருந்த அதே பகுதியை சேர்ந்த சேகரின் பழக்கடை, வெங்கடேஷின் ஓட்டல் கடை எரிந்து நாசமாகின.
இதனிடையே இடைப்பாடி தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை அணைத்தனர். மேலும் கடைகளில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேலும் இச்சம்பவத்தால் இடைப்பாடியின் பெரும்பாலான பகுதிகளில், 2:00 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதிப்பட்டனர்.