/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரான்ஸ்பார்மரில் தீ சிறு தொழிலகம் பாதிப்பு
/
டிரான்ஸ்பார்மரில் தீ சிறு தொழிலகம் பாதிப்பு
ADDED : நவ 22, 2025 01:23 AM
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே, கே.ஆர்.தோப்பூர் மின்பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட கிருஷ்ணன்புதுாரில் 63 கே.வி.,திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று மதியம், 2:30 மணியளவில் திடீரென டிரான்ஸ்பார்மரில் சாட்சர்க்யூட் ஏற்பட்டு வெடித்து சிதறியது.
அதனால், அதிலிருந்த ஆயில் கீழே கொட்டி பரவியதால், 40 அடி உயரத்துக்கு கரும்புகை கக்கியபடி, தீ ஜூவாலை விட்டு எரிந்தது. டிரான்ஸ்பார்மர் தீ விபத்தால் அப்பகுதியில் அரைமணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த மின் ஊழியர்கள், தீயை அணைத்த பின், அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து, குடியிருப்புகளுக்கு மின்சாரத்தை பகிர்ந்தளித்து, மின்தடை பிரச்னையை சமாளித்தனர். எனினும், அங்குள்ள சிறு தொழிலகங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படாத காரணத்தால், அவை இயங்காமல் பாதியில் நிறுத்தப்பட்டது.
உதவி பொறியாளர் கவிதா கூறுகையில், '100 கே.வி.திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் இன்று, 22ல் பொருத்தப்பட்டு, சீரான மின் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

