ADDED : பிப் 13, 2026 04:39 AM
ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:
கடந்த, 2016-ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனித்து நின்றதுபோல், தைரியமிருந்தால் முதல்வர் ஸ்டாலின், வரும் தேர்தலில், 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனித்து நின்று வெற்றிபெற தயாரா? கூட்டணி கட்சிகள் பலத்தால், 40 முதல், 45 சதவீத ஓட்டுகளை பெறும், தி.மு.க., அக்கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு அளிக்க மறுப்பது சமூக நீதிக்கு எதிரானது. இது பண்ணையார் தனம்.
கூட்டணி கட்சியினர் அமைச்சரவையில் இருந்தால், தி.மு.க.,வின் ஊழல், முறைகேடுகள் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில்தான், ஆட்சி அதிகாரத்தை பகிர மறுக்கின்றனர். காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் அதிருப்தியில் உள்ளன. தொகுதி பங்கீடு பேச்சை தாமதப்படுத்தி, கடைசி நேரத்தில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கி, தி.மு.க., அவர்களை நிர்பந்திக்க போகிறது. தலைவர் விஜய் அறிவித்தபடி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதில், த.வெ.க., உறுதியாக இருக்கிறது. அதற்கான பிரசார பயணத்தை தலைவர் தொடங்கிவிட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

