மொபட்டுடன் பள்ளத்தில் விழுந்த த.வெ.க., நிர்வாகி உயிரிழப்பு
மொபட்டுடன் பள்ளத்தில் விழுந்த த.வெ.க., நிர்வாகி உயிரிழப்பு
ADDED : ஏப் 29, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே உலிபுரத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 49. டைலர் தொழில் செய்து வந்தார். த.வெ.க.,வில் ஊராட்சி பொறுப்பாளராக இருந்தார். கடந்த, 25 இரவு, 9:30 மணிக்கு, 'எக்ஸ்.எல்.,' மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் அதே பகுதியில் சென்றபோது,
அங்குள்ள தரைப்பாலத்தில் இருந்து தவறுதலாக மொபட்டுடன், சாலையோர பள்ளத்தில் விழுந்தார். 10 அடி பள்ளத்தில் விழுந்ததில், படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
