அரிவாளுடன் வந்து பணியாளர்களை மிரட்டிய த.வெ.க., பிரமுகரால் பரபரப்பு
அரிவாளுடன் வந்து பணியாளர்களை மிரட்டிய த.வெ.க., பிரமுகரால் பரபரப்பு
ADDED : ஜூலை 07, 2026 06:27 AM

ஓமலுார்; அரிவாளுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட, த.வெ.க.,பிரமுகரை, ஏரி வேலை செய்த பெண்கள் சூழ்ந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம், ஓமலுார் ஒன்றியம், வெள்ளா-ளப்பட்டியை சேர்ந்தவர் சக்தி, 35. இவர், ஓமலுார் தொகுதிக்குட்பட்ட வெள்ளாளப்பட்டியில், த.வெ.க., உறுப்பினராக உள்ளார். நேற்று வி.பி.ஜி.ராம்ஜி திட்ட பெண் பணியாளர்கள், வெள்ளாளப்பட்டி ஏரிக்கரையில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு தனது பல்சர் பைக்கில், டேங்க் சீட்டில் அரிவாள் ஒன்றை வைத்துக்கொண்டு, தனது ஆதரவாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என, மிரட்டும் தொனியில் பெண் பணியாளர்
களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, பணியில் இருந்து பெண் ஒருவர் பைக்கில் இருந்த அரிவாளை வேகமாக எடுத்துக் கொண்டார். மேலும் பணியில் இருந்த பெண்கள், எங்களை மிரட்டுகிறாயா என கேட்டு சக்தியை சூழ்ந்து கொண்டனர். இச்சம்பவத்தை அங்கிருந்த பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அது தற்-போது வைரலாகி
வருகிறது.
