/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 கார்கள் மீது லாரி மோதல்: தப்பினார் ஐ.ஏ.எஸ்.,
/
3 கார்கள் மீது லாரி மோதல்: தப்பினார் ஐ.ஏ.எஸ்.,
ADDED : ஆக 22, 2024 03:50 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே புளியம்பட்டியில் நேற்று இரவு, 9:30 மணிக்கு, 'பார்சல்' கொண்டு செல்லக்கூடிய, கர்நாடகா பதிவெண் கொண்ட லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென முன்புறம் சென்றுகொண்டிருந்த, இன்னோவா, எம்.ஜி., உள்பட, 3 கார்கள் மீது அடுத்தடுத்து மோதின.
இதில் சென்னையில் இருந்து மேட்டூர் செல்வதற்கு, எம்.ஜி., காரில் சிலருடன் பயணித்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, அண்ணாதுரை காயமின்றி தப்பினார். ஆனால் அந்த காரின் பின் பகுதி முழுதும் சேதமானது. பின் அண்ணாதுரை மற்றொரு காரில் மேட்டூர் புறப்பட்டார்.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கார்கள் மட்டும் சேதமாகின. இச்சம்பவத்தால், அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓமலுார் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின், 'குடி'போதையில் வந்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.