ADDED : ஆக 23, 2026 04:39 AM
அ நிறம் | அளவு
சேலம்:இடைப்பாடியை
சேர்ந்தவர் கவுதம், 29. லாரி டிரைவரான இவர், ஹைதராபாதில் இருந்து
மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு, திருப்பூர் நோக்கி வந்து
கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சேலம் மாவட்டம்
வீராணம், அடிமலைபுதுாரில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி,
சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் கவுதம், சம்பவ இடத்தில்
பலியானார். உதவியாளராக இருந்த ஜெயக்குமார், படுகாயம் அடைந்து, அருகே
உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீராணம்
போலீசார் விசாரிக்கின்றனர்.
