/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி, டிராக்டர், கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்

ADDED : மே 08, 2024 11:16 AM

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ளது உத்தமசோழபுரம் . இது சேலம் -ஈரோடு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையில் இன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது . இந்த கார் பின்னால் டிராக்டர் சென்றது. அப்போது காரின் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று டிராக்டர் மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது.
இதில் டிராக்டரை ஓட்டி வந்த பனமரத்துப்பட்டியை சேர்ந்த ராஜா என்பவர் படுகாயம் அடைந்து இறந்து விட்டார். காரில் வந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.