மேற்கில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் விசிலுக்கு ஓட்டு சேகரித்த த.வெ.க., வேட்பாளர்
மேற்கில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் விசிலுக்கு ஓட்டு சேகரித்த த.வெ.க., வேட்பாளர்
ADDED : ஏப் 19, 2026 06:13 AM
சேலம், சேலம் மேற்கு தொகுதி, த.வெ.க., வேட்பாளர் லட்சுமணன், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராம்தோட்டம் பின்புறம், செல்வி மளிகை கடை, பழைய சூரமங்கலம் அம்பேத்கர் நகர் ஓடை, அஸ்வா பார்க் ஹோட்டல், அருந்ததியர் தெரு மாரியம்மன் கோவில் அருகே உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது, சாலை, சாக்கடை, தெருவிளக்கு, பஸ் வசதி, விளையாட்டு மைதானம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தர, மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக, லட்சுமணன் உறுதி அளித்தார். முன்னதாக, பெண்கள் மலர் துாவி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் பிரசாரத்தின்போது லட்சுமணன் பேசியதாவது:
த.வெ.க., ஆட்சி அமைந்ததும், 60 வயது குடும்ப தலைவிகளுக்கு மாதம், 2,500 ரூபாய் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும். ஏழை குடும்ப பெண்களுக்கு திருமணத்தின்போது, 8 கிராம் தங்கம், பட்டு புடவை, தமிழகத்தில் பிறக்கும் குழந்தை
களுக்கு மோதிரம் வழங்கப்படும். மேலும், 29 வயதுக்கு மேல் வேலை இல்லா பட்ட
தாரிகளுக்கு, மாதம், 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் போதை ஒழிப்பு பாதுகாப்பு மண்டலங்கள் அமைக்கப்பட்டு, போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிறு விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்படும். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலைக்கு வெளிப்படையான பணியமர்த்தல் செய்யப்படும்.
சேலம் மேற்கு தொகுதி முழுதும் மக்களின் அடிப்படையான தேவைகளான கல்வி, மருத்துவம், துாய்மையான குடிநீர், தரமான சாலை, கிராமங்கள் தோறும் பஸ் வசதி, பெண்களின் பாதுகாப்பு, போதையில்லா இளைய சமுதாயம் ஆகியவை உருவாக்க பாடுபடுவேன். தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மாணவ மாணவியரின் நலன்களில் கவனம் செலுத்தப்படும்.
ஒரு மாற்றத்தை தாருங்கள். விஜய் அறிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மேற்கு தொகுதி மக்களுக்கு கிடைக்க நிச்சயம் பாடுபடுவேன். அதனால் விசிலுக்கு ஓட்டளித்து, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.
மேலும் தொகுதி முழுதும் தங்கு தடையற்ற குடிநீர், மின்சாரம், சாக்கடை வடிகால், கழிப்பிடம், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும்.
இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்கவும், அவர்களை விளையாட்டு போட்டிகளில் ஈடுபட ஊக்கப்படுத்தவும் நவீன விளையாட்டு மைதான வளாகம் அமைக்கப்படும். மக்கள் குடிக்க தண்ணீர், இருக்க இருப்பிடம், நல்ல உணவு, உடுத்த உடை ஆகிய தேவைகளை தான் எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கு எது தேவையோ அதை செய்து கொடுக்காமல் அமைச்சர்கள் ஊழல் செய்யும் திட்டங்கள், மேல் தட்டு மக்களுக்கு மட்டும் பயன்படும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர். ஏழை மக்களுக்கான முழுமையான மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை. வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, த.வெ.க., ஆட்சி அமைத்ததும், தமிழகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மக்களாகிய நீங்கள் மேலும் ஏமாறாமல் தமிழகத்தில் லஞ்சம் இல்லாத நேர்மையான ஆட்சியை அமைக்க விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
