/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டர்ப்' விளையாட்டு மைதானம் ஏற்காட்டில் முதல்முறை திறப்பு
/
'டர்ப்' விளையாட்டு மைதானம் ஏற்காட்டில் முதல்முறை திறப்பு
'டர்ப்' விளையாட்டு மைதானம் ஏற்காட்டில் முதல்முறை திறப்பு
'டர்ப்' விளையாட்டு மைதானம் ஏற்காட்டில் முதல்முறை திறப்பு
ADDED : ஜூலை 14, 2025 04:08 AM
ஏற்காடு: ஏற்காட்டில் முதல்முறை, 'டர்ப் 1515' பெயரில், விளையாட்டு மைதான திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி திறந்து வைத்தார். மைதான உரி-மையாளர்களான, அருள் விக்னேஷ், செல்வகீதன், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் பிள்ளை, ரமேஷ், மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் அறிவுசந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அருள் விக்னேஷ் கூறியதாவது: வலை கட்டி அதற்குள் விளையாடக்கூடிய மைதானம் தான், 'டர்ப்'. சேலம் மாவட்டத்தில் உள்ள, 'டர்ப்' மைதானங்களில், இது பெரியது. கிரிக்கெட், கால்பந்து போன்றவை விளையாடும்படி வடிவமைக்-கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து விளையாடும்படி வாடகை நிர்ணயிக்கப்படும். திறப்பு விழாவை ஒட்டி, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை மகிழ்விக்க, ஒரு அணியில், 7 பேர் விளையாடும்படி, 20 அணிகள் கொண்ட கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. உள்ளூர் இளைஞர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மைதானம் அருகே, சேலம் ஹில் ரோட்டரி கிளப் சார்பில், புதிதாக கட்டப்பட்ட, 'கன்வென்ஷன் ஹால்' அரங்-கத்தை, கூடுதல் அட்வகேட் ஜெனரல் சந்திரமோகன், ரோட்டரி முன்னாள் கவர்னர் செந்தில்குமார் திறந்து வைத்தனர். பின் கிளப் தலைவர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

