ADDED : நவ 05, 2026 07:24 PM
ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுாரில், தி.மு.க.,வின் கிழக்கு ஒன்றியம், பேரூர் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (நவ.,5) நடந்தது. ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார்.
அதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
ஆட்சியில் இல்லை என்றாலும் எதிர்கட்சியாக இருந்து மக்களுக்கு நல்ல பணிகளை வழங்குவது, தி.மு.க., மட்டும் தான். சினிமா மாயையால், த.வெ.க., ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சி தற்காலிகமானது தான். விலைவாசி உயர்வால் மக்கள் துன்பப்படும் ஆட்சியாக உள்ளது. விரைவில் மக்களாலேயே இந்த ஆட்சி துாக்கி எறியப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றியம், நகரம், வார்டு, கிளை நிர்வாகிகள் என, 500 பேருக்கு, 2,000 ரூபாய் மதிப்பில், தீபாவளி பரிசு பொருட்களை, ராஜேந்திரன் வழங்கினார். மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, ஓமலுார் நகர செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
