/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருட்டு, வழிப்பறி வழக்கு இருவருக்கு குண்டாஸ்
/
திருட்டு, வழிப்பறி வழக்கு இருவருக்கு குண்டாஸ்
ADDED : நவ 22, 2025 01:24 AM
சேலம், சேலம் சீலநாயக்கன்பட்டி, பராசக்தி நகரை சேர்ந்தவர் சதீஷ், 25. தாதகாப்பட்டி, பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் கோபி, 24. இருவரும் கடந்த, 6ல் வீரபாண்டி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி, ரூ.2,000 பறித்து சென்றனர். அங்கிருந்த பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தப்பினர். இது குறித்து கண்ணன் கொடுத்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சதீஷ் கடந்த சில தினங்களுக்கு முன் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக, கொண்டலாம்பட்டி போலீசில் வழக்கு உள்ளது. 2024ல், திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தில் கோபி மீது வழக்கு உள்ளது. எனவே சதீஷ், கோபி இருவரையும் குண்டாசில் கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கேழ்கர் சுப்ரமணிய பாலசந்தரா
சிபாரிசை ஏற்று, நேற்று இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ்
கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார்.

