ADDED : அக் 08, 2024 03:25 AM
ஏற்காடு: ஏற்காடு செம்மநத்தம் கிராமம் அருகில் உள்ளது ஒலக்கோடு. இங்குள்ள தனியார் தோட்டத்தில் நேற்று காலை, 8:30 மணிக்கு இரண்டு காட்டெருமைகள் சண்டையிட்டு கொண்டன. இதில் ஏழு வயது உள்ள ஆண் காட்டெருமை, 10 அடி உயரம் உள்ள திட்டில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதில் காட்டெருமைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஏற்காடு வனச்சரக அலுவலர் முருகன் தலைமையில், வன-வர்கள் தமிழரசன், சக்திவேல் உள்ளிட்ட வனத்துறையினர் ஐந்து பேர் கொண்ட குழுவினர் மற்றும் கால்நடை மருத்துவர் பாண்-டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையோரத்தில் கிடந்த காட்டெருமையை, கிரேன் மூலம் துாக்கி, அருகில் உள்ள தனியார் நிலத்தில் வைத்து காட்டெருமைக்கு மருத்துவம் பார்த்-தனர்.
ஆனால், ஏழு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாலை, 5:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி காட்டெருமை உயிரிழந்தது. பின், கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்து, காட்-டெருமையை அருகில் உள்ள வனப்பகுதியில் புதைத்தனர்.
