/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மர்ம விலங்கு கடித்து பசுங்கன்று பலி 2 வன குழுவினர் கண்காணிப்பு
/
மர்ம விலங்கு கடித்து பசுங்கன்று பலி 2 வன குழுவினர் கண்காணிப்பு
மர்ம விலங்கு கடித்து பசுங்கன்று பலி 2 வன குழுவினர் கண்காணிப்பு
மர்ம விலங்கு கடித்து பசுங்கன்று பலி 2 வன குழுவினர் கண்காணிப்பு
ADDED : ஜூலை 24, 2025 01:45 AM
மேட்டூர்,மேட்டூர் வனச்சரகம், கோனுார் காப்புக்காடு, திப்பம்பட்டி விவசாயி செல்லப்பன், 55. இவரது கால்நடைகளை, கடந்த, 21ல், அருகே உள்ள சோளப்பாடி மலை அடிவாரம், மேய்ச்சலுக்கு விட்டார்.
மாலை மாடுகள், பட்டிக்கு திரும்பின. ஒரு கன்று மட்டும் வரவில்லை. செல்லப்பன் தேடி, வனப்பகுதிக்கு சென்றார். இருள் சூழ்ந்ததால் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் காலை மீண்டும் வனப்பகுதிக்கு சென்று தேடினார். அப்போது வனஎல்லையில் கன்று கழுத்து, வயிறு கடிக்கப்பட்டு குடல் வெளியே வந்த நிலையில் இறந்து கிடந்தது.
இதை அறிந்து வனவர் கண்ணன் உள்ளிட்ட வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட பின், மர்ம விலங்கு கடித்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், சோளப்பாடி மலை அடிவார கிராமங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என, விவசாயிகளிடம் அறிவுறுத்தினர். மேலும் இரு நாட்களாக வன ஊழியர்கள் தலா, 6 பேர் அடங்கிய இரு குழுவினர், பகல், இரவில் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.