/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரு கொ.மு.க., கட்சியினர் என்.டி.ஏ., கூட்டணிக்கு ஆதரவு
/
இரு கொ.மு.க., கட்சியினர் என்.டி.ஏ., கூட்டணிக்கு ஆதரவு
இரு கொ.மு.க., கட்சியினர் என்.டி.ஏ., கூட்டணிக்கு ஆதரவு
இரு கொ.மு.க., கட்சியினர் என்.டி.ஏ., கூட்டணிக்கு ஆதரவு
ADDED : பிப் 07, 2026 04:33 AM
சேலம்: தமிழகத்தில், விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணிக்கு, கொங்கு முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் மாநில பொதுச்செயலாளர் தங்கவேல் தலைமையில்,
நிர்வாகிகள் நேற்று சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,ஐ சந்தித்து, அ.தி.மு.க., தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினர்.
அதே போல, கொங்கு நாடு முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் அதன் நிர்வாகிகள், இ.பி.எஸ்.,ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதாக உறுதிய-ளித்து கடிதம் வழங்கினர். தர்மபுரி மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகன் உடனிருந்தார்.