ADDED : மார் 25, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
ஆத்துார், ஆத்துார், கல்லாநத்தம் ஊராட்சி முட்டலை சேர்ந்தவர் கண்ணன், 72. இவரது தோட்டத்தில் ஆடு, மாடு வளர்க்கிறார். நேற்று முன்தினம் மதியம், 'கிடா' ஆட்டை காணவில்லை. இதுகுறித்து கண்ணன் புகார்படி, ஆத்துார் ஊரக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில், 'பல்சர்' பைக்கில், முல்லைவாடியை சேர்ந்த ராஜ
குமாரன், 19, மற்றும் 18 வயது சிறுவன் திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று, போலீசார் கைது செய்தனர்.
