/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் 51 பவுன் திருட்டு முகமூடி அணிந்த 2 பேர் கைவரிசை
/
அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் 51 பவுன் திருட்டு முகமூடி அணிந்த 2 பேர் கைவரிசை
அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் 51 பவுன் திருட்டு முகமூடி அணிந்த 2 பேர் கைவரிசை
அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் 51 பவுன் திருட்டு முகமூடி அணிந்த 2 பேர் கைவரிசை
ADDED : ஜன 26, 2025 03:40 AM
ஆத்துார்: அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில், முகமூடி அணிந்து புகுந்த, 2 பேர், 51 பவுன் நகைகள், ஒரு லட்சம் ரூபாயை திருடிச்சென்-றனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே, வடசென்னிமலை, எம்.பி., நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 54. ஆத்துார் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பொறுப்பில் உள்ளார்.
இவரது மனைவி சித்ரா, அதே கல்லுாரியில் கவுரவ விரிவுரையா-ளராக உள்ளார். கடந்த, 23ல், செல்வராஜின் மாமனார் ராமசாமி இறந்தார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு, தலைவாசல் அருகே பெரியேரிக்கு, குடும்பத்தினர் சென்றனர்.
நேற்று மதியம், 2:30 மணிக்கு, செல்வராஜ் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, இரு பீரோக்களும் உடைந்திருந்-தன.
அதில் இருந்த, வளையல், அட்டிகை, டாலர், சங்கிலி, மோதிரம், தோடு, பிரேஸ்லெட் உள்பட, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 51 பவுன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய், பட்டு சேலை உள்ளிட்ட உயர் ரக துணிகள், பொருட்கள் திருடுபோனது தெரிந்தது.
இதுகுறித்த தகவல்படி, சேலம் கூடுதல் எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையில், ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் உள்ளிட்ட ஆத்துார் ஊரக போலீசார், சம்பவ வீட்டில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, 'லில்லி' எனும் மோப்ப நாய் மூலம் சோதனை நடந்-தது. நாய், வீட்டில் இருந்து காட்டுக்கோட்டை பஸ் ஸ்டாப் வரை சென்று திரும்பியது. பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவான கைரேகைகளை, அதன் நிபுணர்கள் சேகரித்தனர்.
பின் செல்வராஜ் வீடு, அதன் வெளியே இருந்த, 'சிசிடிவி'யை, போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை, 2:00 மணிக்கு, முகமூடி அணிந்த இருவர் வீட்டிற்குள் சென்றனர். அவர்கள், பூட்டுகளை உடைத்து பணம், நகை திருடிச்சென்றது பதிவாகியிருந்தது. இக்காட்சிகள் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.
கூடுதல் எஸ்.பி., சோமசுந்தரம் கூறுகையில், 'டி.எஸ்.பி., தலை-மையில் இரு தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது,'' என்றார்.