தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கொலை முயற்சி வழக்கு 2 பேருக்கு 'காப்பு'

கொலை முயற்சி வழக்கு 2 பேருக்கு 'காப்பு'

கொலை முயற்சி வழக்கு 2 பேருக்கு 'காப்பு'


ADDED : ஏப் 29, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார், ஓமலுார் அருகே பொட்டியபுரத்தை சேர்ந்தவர்கள் விஷ்வா, 23, பிரவீன், 25. இவர்கள் இணைந்து வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதால், ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் உள்ளன. தொடர்ந்து இவர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், 2024ல், பிரவீன் உள்ளிட்ட சிலர், விஷ்வா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். பிரவீன் வீடு மீதும், விஷ்வா தரப்பினர் பெட்ரோல் குண்டு வீசினர். இதுதொடர்பாக இருதரப்பிலும் கைது செய்யப்பட்டனர்.

இதில் முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த, 26 இரவு, பொட்டியபுரம் மாரியம்மன் கோவில் அருகே பிரவீன் சென்றபோது, விஷ்வா உள்பட சிலர் இருந்தனர். அச்சம் அடைந்து பிரவீன் வேகமாக புறப்பட்டபோது, விஷ்வா தரப்பினர் விரட்டினர். உடனே, கொலை செய்ய துரத்துவதாக ஓமலுார் போலீசாருக்கு, பிரவீன் தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்றபோது யாரும் இல்லை.

இதுகுறித்து பிரவீன் புகார்படி நேற்று விஷ்வா உள்பட, 5 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதில் மேச்சேரியை சேர்ந்த, டீ மாஸ்டர் தமிழ் செல்வன், 26, விஷ்வாவின் சகோதரரான, மனோகர், 24, ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us