/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளைகோட்டுக்கு அருகே பள்ளம் தடுமாறும் இருசக்கர வாகன ஓட்டிகள்
/
வெள்ளைகோட்டுக்கு அருகே பள்ளம் தடுமாறும் இருசக்கர வாகன ஓட்டிகள்
வெள்ளைகோட்டுக்கு அருகே பள்ளம் தடுமாறும் இருசக்கர வாகன ஓட்டிகள்
வெள்ளைகோட்டுக்கு அருகே பள்ளம் தடுமாறும் இருசக்கர வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 14, 2025 02:45 AM
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி, போதுப்பட்டியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. நகர் பகுதியில் இருந்து சிட்கோ வரை தார்ச்சாலையின் இரண்டு பக்கமும் ஓரத்தில், 'பேவர்பிளாக்' கல் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் நகர்பகுதி விரிவடைந்து வருகிறது.
குறிப்பாக, மோகனுார் சாலை, திருச்சி சாலை, பரமத்தி சாலை, திருச்செங்கோடு சாலையில் வர்த்தக நிறுவனங்கள் பெருகியதால், வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. அதில், பரமத்தி சாலையில் செயல்படும் சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து, காவேட்டிப்பட்டி வரை சாலையின் இரண்டு பக்கங்களிலும் வெள்ளைக்கோடு போடப்பட்ட இடத்திற்கும் மேல் போதிய இடவசதி இல்லாமல் பள்ளமாக உள்ளது. இதனால், கனரக வாகனங்கள் செல்லும்போது, ஓரமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் பக்கவாட்டில் இறங்கும்போது சறுக்கி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நாமக்கல்-பரமத்தி சாலை, சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து காவேட்டிப்பட்டி, வள்ளிபுரம் தேசியநெடுஞ்சாலை மேம்பாலம் வரை, சாலையின் இரண்டு பக்கங்களிலும் பேவர்பிளக் கற்கள் பதிக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.