/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆசிட் தொட்டி வெடித்து இரு ஊழியர்கள் படுகாயம்
/
ஆசிட் தொட்டி வெடித்து இரு ஊழியர்கள் படுகாயம்
ADDED : அக் 26, 2025 02:00 AM
மேட்டூர்: சிட்கோ தொழிற்பேட்டையில் சல்பியூரிக் ஆசிட் தொட்டி வெடித்து, ஆசிட் சிதறியதில், இரு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் பாலமுருகன், 50; மேட்டூர் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில், 'கபாலீஸ்வரர் கெமிக்கல்ஸ்' பெயரில் மெக்னீசியம் சல்பைட் தயாரிக்கும் ஆலை நடத்துகிறார். இங்கு வடமாநிலத்தினர் உட்பட, 30 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
நேற்று காலை, 7:15 மணிக்கு சல்பியூரிக் ஆசிட் தொட்டி அருகே, மெக்னீசியம் சல்பைட் அரைக்கும் இயந்திரத்துக்கு செல்லும் தண்ணீர் குழாய் பழுதானது. அதை சரிசெய்யும் பணியில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த இரு தொழிலாளர்கள் ஈடுபட்ட நிலையில், திடீரென ஆசிட் தொட்டி வெடித்து சிதறியது.
இதில், ஆசிட் சிதறி, பணியில் இருந்த ராகேஷ்ராம், 38, பஸ்வான், 38, மீது பட்டதில், இருவரது உடல்களிலும் படுகாயம் ஏற்பட்டன.
இருவரும் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் ஆலையின் கூரை சேதமானது. கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

