/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விசாரணைக்கு ஆஜராகாத வாலிபர் இருவர் கைது
/
விசாரணைக்கு ஆஜராகாத வாலிபர் இருவர் கைது
ADDED : நவ 05, 2024 01:41 AM
விசாரணைக்கு ஆஜராகாத
வாலிபர் இருவர் கைது
சேலம், நவ. 5-
சேலம் பனங்காடு ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம், 43. இவரது மனைவி கடந்த, 2015ல் தற்கொலை செய்து கொண்டார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, தற்கொலைக்கு துாண்டியதாக மாணிக்கத்தை கைது செய்தனர்.
ஜாமினில் வெளியே வந்த மாணிக்கம், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு கடந்த, 10 மாதங்களாக ஆஜராகாமல் இருந்துள்ளார். மாணிக்கத்தை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், கொண்டலாம்பட்டி போலீசார் நேற்று காலை அதே பகுதியில் பதுங்கியிருந்த மாணிக்கத்தை கைது செய்தனர்.
இதே போல கொண்டலாம்பட்டியை சேர்ந்த பிரபாகரன், 35, என்பவர், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த பிரபாகரன், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறபித்தது. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் இருந்த பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.