/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏர்போர்ட்டில் 'உடான்' திட்ட 9ம் ஆண்டு தொடக்க விழா
/
ஏர்போர்ட்டில் 'உடான்' திட்ட 9ம் ஆண்டு தொடக்க விழா
ADDED : அக் 23, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், சேலம் விமான நிலையத்தில், மத்திய அரசின், 'உடான்' திட்டத்தில்(பிராந்திய இணைப்பு சேவை) குறைந்த கட்டணத்தில் பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின் பகுதிகளுக்கு பயணியர் விமான சேவை இயக்கப்படுகிறது. அங்கு, 9ம் ஆண்டு, 'உடான்' திட்ட தொடக்க விழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் தலைமை வகித்தார்.
அதில் விமான நிலைய அலுவலர்கள், பணியாளர்கள், பயணியர், டெர்மினல் வளாகத்தில் கேக் வெட்டினர். 9ம் ஆண்டு நினைவாக, 'செல்பி பாயின்ட்' அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பயணியர், போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.