/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
/
கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
ADDED : நவ 11, 2025 02:01 AM
இடைப்பாடி, தேவூர், ராமகூடல் பகுதியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத வாலிபரின் சடலத்தை, போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தேவூர் புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் கிராமம் ராமகூடல் பகுதியில் உள்ள கால்வாயில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வி.ஏ.ஓ., அருள்முருகனுக்கு தகவல் கொடுத்தனர். வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர் சென்று பார்த்தபோது, 35 வயதுள்ள ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. சாம்பல் நிற டி-சர்ட், கறுப்பு நிற கால் சட்டை அணிந்துள்ளார்.
வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை கொலை செய்து யாராவது வீசி சென்றனரா என, தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை பணியாளர்கள்

