ADDED : ஜூன் 19, 2026 02:32 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்; ஆத்துார் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆத்துார் நகராட்சி அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது. ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி தலைமை வகித்தார்.
அப்போது, ஆத்துார், கெங்கவல்லி, தலை-வாசல், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா விவ-சாயிகள், 'நீர் நிலை, பொது இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, பயனுள்ள மரக்கன்றுகள் நடவேண்டும்.
விவசாய வேளாண் பயிர்களுக்கு தடையின்றி உரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர். தாசில்தார்கள், வேளாண் அலு-வலர்கள் பங்கேற்றனர்.
