/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலைவாசல் கால்நடை பூங்கா வணிக கட்டடங்கள் தனியாருக்கு விடும் முடிவை கைவிட வலியுறுத்தல்
/
தலைவாசல் கால்நடை பூங்கா வணிக கட்டடங்கள் தனியாருக்கு விடும் முடிவை கைவிட வலியுறுத்தல்
தலைவாசல் கால்நடை பூங்கா வணிக கட்டடங்கள் தனியாருக்கு விடும் முடிவை கைவிட வலியுறுத்தல்
தலைவாசல் கால்நடை பூங்கா வணிக கட்டடங்கள் தனியாருக்கு விடும் முடிவை கைவிட வலியுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2025 04:08 AM
தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல் கால்நடை பூங்காவில் உள்ள வணிக கட்டடங்களை, தனியாருக்கு வாடகைக்கு விடுவதாக வெளியான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என, தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஐக்கிய விவசாயிகள் சங்கத்தலைவர் சங்கரய்யா கூறி-யதாவது: தலைவாசல், வி.கூட்ரோட்டில், 1,100 ஏக்கரில், 1,022 கோடி ரூபாயில், கால்நடை விலங்கின அறிவியலுக்கான ஒருங்கி-ணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், கடந்த, அ.தி.மு.க., ஆட்-சியில் கட்டப்பட்டது. அங்கு ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவ கல்லுாரி செயல்படுகிறது.
கடந்த, 25ல், கால்நடை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள வணிக கட்டடங்களை, மாத வாடகைக்கு விட, 'டெண்டர்' அறி-விப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்குள்ள உணவகம், சூப்பர் மார்க்கெட், இரு இறைச்சி கடைகள், விவசாய இயந்திர கடை, பண்ணை விற்பனை நிலையம், 12 கொட்டகைகளுடன் கூடிய இரு கோழி பண்ணைகள், குஞ்சு பொரிப்பகம், இயந்திரங்க-ளுடன் கூடிய தீவன ஆலை, கோழி இறைச்சி கூடம், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு இறைச்சி கூடம், பன்றி இறைச்சி கூடம் என, 13 இனங்களில், 88,688 சதுரடி வணிக கட்டடங்களுக்கு, ஜூலை, 16ல், 'டெண்டர்' நடக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். ஒப்பந்தம் மூலம் தனியார் மயமாக்கப்படுவதற்கு, இந்த அறி-விப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கால்நடை பூங்கா வளாகத்தில் நிறுவ வேண்டிய நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம், ஆவின் பல்பொருள் உற்பத்தி திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்த பிறகும், அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அதனால், 'டெண்டர்' அறி-விப்பை, தமிழக அரசு திரும்ப பெற்று, இத்திட்டங்களுக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து, பணியாளர்களை நிய-மனம் செய்து, திட்டங்களை அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும். அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., திட்டத்தை தொடங்கி வைத்தபோது, கால்நடை பூங்கா மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார். ஆனால், தனியாருக்கு வாடகைக்கு விடுவதாக வெளியான விளம்பரத்தால், கால்நடை பூங்கா அமைத்த நோக்கம், திட்டம் பயனற்று போகும் நிலையும், வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.