/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சண்முகா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
/
சண்முகா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
UPDATED : செப் 17, 2025 06:02 AM
ADDED : செப் 17, 2025 02:01 AM
சேலம் சேலம் சாரதா காலேஜ் ரோட்டில் உள்ள, சண்முகா மருத்துவமனை சார்பில் நெஞ்சு எரிச்சல் மற்றும் அல்சர் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இலவச மருத்துவ முகாம் நேற்று காலை தொடங்கியது.
மருத்துவமனை நிர்வாக முதன்மை இயக்குனர் டாக்டர் பிரபு சங்கர், முகாமை தொடங்கி வைத்தார். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பிரியதர்ஷினி பிரபு சங்கர் முன்னிலை வகித்தார். கல்லீரல் குடல் மற்றும் கணையம் அறுவை சிகிச்சை நிபுணர் அருண்ராஜ், கல்லீரல் குடல் மருத்துவ சிகிச்சை நிபுணர் சித்தார்த் ஆகியோர், நெஞ்செரிச்சல், வயிறு புண், மார்பின் மேற்பகுதியில் எரிச்சல் உணர்வு, வயிற்றில் இருந்து அமிலம் வாய்க்கு வருவதால் புளிப்பு கசப்பு தன்மை, வயிற்றில் இருந்து உணவு அமிலம் உணவு குழாயில் மேல்நோக்கி வருதல் போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கினர்.
இது குறித்து டாக்டர் பிரபு சங்கர் கூறுகையில்,''- முகாம் வரும், 20ம் தேதி வரை நடைபெறுகிறது. சேலத்தில் முதல் முறையாக 24 மணி நேர ( பிஎச்) மற்றும் மேனோமொட்ரி பரிசோதனை செய்யப்படுகிறது. இலவச ஆலோசனை மற்றும் சலுகை கட்டணத்தில் பரிசோதனை செய்யப்படுவதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.