/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்யாண சுப்ரமணியர் கோவிலில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்
/
கல்யாண சுப்ரமணியர் கோவிலில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்
கல்யாண சுப்ரமணியர் கோவிலில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்
கல்யாண சுப்ரமணியர் கோவிலில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்
ADDED : ஏப் 13, 2025 04:53 AM
சேலம்: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, சேலம், பொன்னம்மாப்பேட்டை புத்துமாரி-யம்மன் கோவில் அருகே உள்ள கல்யாண சுப்ரமணியர் கோவிலில், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடந்-தது. பாண்டியன் தெரு பெண்கள் சார்பில், முதலாம் ஆண்டாக நடந்த நிகழ்வில், காலை, 9:00 மணிக்கு, சீர்வரிசை தட்டுக-ளுடன், திரளான பெண்கள், கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
காலை, 10:00 முதல், 12:00 மணிக்குள், சிவாச்சாரியார்களால் வள்ளி, தெய்வானை தேவியர்களுடன் சுப்ரமணியருக்கு திருமண சடங்குகள் செய்து, மாங்-கல்யம் அணிவித்து கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. மாலை, சப்பரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், மணக்கோ-லத்தில் திருவீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்-டனர்.
அதேபோல் தலைவாசல், வீரகனுார், ராயர்பாளையம் மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு, 100க்கும் மேற்பட்ட பக்தர் கள், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னி கரகம் எடுத்தும் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.