ADDED : ஏப் 03, 2026 11:09 PM

வாழப்பாடி: தேர்தலில் போட்டியிடும் மனைவிக்கு ஆதரவாக ஓட்டு கேட்கும் வி.ஏ.ஓ.,வால் சர்ச்சை எழுந்துள்ளது.
சேலம், ஏற்காடு தொகுதி, தி.மு.க., வேட்பாளர் ரேவதி. இவர், பாப்பநாயக்கன்பட்டி அருகே ஏழுபுளி கிராமத்தை சேர்ந்தவர். இவரை அறிமுகப்படுத்தும் கூட்டம், வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், ரேவதியின் கணவரான, புதுக்கோட்டை மாவட்டம், குளத்துாரில், வி.ஏ.ஓ.,வாக பணிபுரியும் மாதேஸ்வரன் பங்கேற்றார். அப்போது நின்றபடி, கையெடுத்து கும்பிட்டு, தி.மு.க.,வுக்கும், அவரது மனைவிக்கும் ஓட்டு சேகரித்தார்.
அதேபோல், இரு நாட்களாகவே, தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், தி.மு.க., அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து, ரேவதிக்கு ஆதரவு கேட்டு வருகிறார்.
மக்களிடமும், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அரசு ஊழியராக உள்ள அவர், மருத்துவ விடுப்பு எடுத்து, தி.மு.க.,வுக்கு ஆதரவாக கட்சி பணியில் ஈடுபடுவது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
