தங்க புதுப்பிப்பு கடையில் ஆய்வு பல்வேறு ஆவணங்கள் பறிமுதல்
தங்க புதுப்பிப்பு கடையில் ஆய்வு பல்வேறு ஆவணங்கள் பறிமுதல்
ADDED : செப் 12, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ். கடைவீதியில், பழைய தங்கத்தை உருக்கி புதுப்-பிக்கும் கடை வைத்துள்ளார். தங்கத்தை புதுப்-பித்து ஹால்மார்க் நகைகளாக தயாரித்தும் விற்-கிறார். அங்கு, கோவையை சேர்ந்த, ஜி.எஸ்.டி., நுண்ணறிவு அதிகாரிகள், சேலம் ஜி.எஸ்.டி., நிர்-வாகிகள் சிலர், நேற்று முன்தினம் காலை முதல், நேற்று மாலை, 5:00 மணி வரை, கணக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். அதில் பல்வேறு கணக்கு ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறு-கையில், 'ஜி.எஸ்.டி., சரியாக கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு நடந்தது. மேலும் கணக்குகள் சரி-பார்க்கப்பட்டு ஏய்ப்பு நடந்திருந்தால் சம்பந்தப்-பட்ட கடைக்கு அபராதம் விதிக்கப்படும்' என்-றனர்.
