ADDED : மே 08, 2025 01:10 AM
அ நிறம் | அளவு
சேலம், மழை பெய்ய வேண்டி, சேலம் மாவட்ட சவுராஷ்டிரா புரோகிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சங்கம் சார்பில், திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் உள்ள சவுராஷ்டிரா விப்ரகுல நந்தவனத்தில் வருண ஜெப யாகம் நேற்று தொடங்கியது. காலையில் கோமாதா பூஜை, திவ்யபிரபந்த சேவை, மங்கள ஆரத்தி, ஹோமங்கள் நடந்தன.
தொடர்ந்து அர்ச்சகர்கள் தண்ணீர் தொட்டியில் இறங்கி, வேத மந்திரம் முழங்க ஜெபத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முதல் கால பூர்ணாஹூதி, மங்கள ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு இரண்டாம் கால பூர்ணாஹூதி, பூஜை நடந்தது. நாளையும் வருண யாகம் நடக்கிறது. இதுகுறித்து, சத்தியராம் ஆச்சாரியார் கூறுகையில், ''பருவ மழை சரியான முறையில் பெய்து தண்ணீர் பஞ்சம் தீர யாகம் நடத்துகிறோம்,'' என்றார்.
